Tamil Rhymes

தமிழ் குழந்தை பாடல்கள் 

அம்மா வந்தா இந்தப்  பக்கம் 
அப்பா வந்தா அந்தப்  பக்கம் 
நான் வந்தேன் நடுவிலே 
தடாம் விழுந்தோம் வழியிலே 

ஹா ஹா ஹா ஹா ஹா 

ஆ ஆ ஆ ஆ 
ஆமையம்மா ஆமை
ஆ ஆ ஆ ஆ
அசைந்துவரும் ஆமை
ஆ ஆ ஆ ஆ
ஆடி ஆடி நடக்கும்
ஆ ஆ ஆ ஆ
ஆற்று நீரை குடிக்கும்
ஆ ஆ ஆ ஆ
ஆசையாக பார்க்கும்

இரண்டு கண்ணும் பார்க்குமே 
இந்த  படத்தை பார்க்குமே 
இரண்டு காதும் கேட்குமே 
இனிய சொல்லை கேட்குமே 
இரண்டு காலும் நடக்குமே 
இங்கே வர துடிக்குமே 
இரண்டு கையும் அணைக்குமே 
இதமாக நமக்கு இருக்குமே!

Learn more from the book